அர்ஜூன் மகேந்திரன் விவகாரம்! மைத்திரி வெளிப்படுத்தியுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் சர்வதேச பொலிஸாருக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுவதால் இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“மத்தியவங்கி பிணைமுறி மோசடியின் ஊடாக நன்மையடைந்தவர்களே அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதைத் திட்டமிட்டு குழப்பிவருகிறார்கள். அவர்கள் யார் என்பது நாட்டுமக்கள் அவைருக்கும் தெரியும்.

ஆரம்பத்தில் அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், அவரை கைதுசெய்யுமாறும் கோரி நாம் சர்வதேச பொலிஸாருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தோம்.

எனினும் எமது அரசாங்கத்திலிருந்து வேறொரு தரப்பினர், இது பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரச்சினையல்ல எனவும், இதுவோர் அரசியல் பிரச்சினையென்றும் கடிதம் அனுப்பினர்.

இதன்காரணமாக சர்வதேச பொலிஸார் இதில் தலையிட முடியாதென எமக்கு அறிவித்தனர். மீண்டும் இதுபற்றி விளக்கிக் கடிதமொன்றை அனுப்பிய பின்னரேயே அவர்கள் சிவப்பு அறிவித்தல் விடுத்தார்கள்” என கூறியுள்ளார்.