பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டை பெறும் - ரோஹித்த அபேகுணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் என்பதை திடமாக நம்புவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிர்க்கட்சிகள் தேர்தல் குறித்து கடும் அச்சத்தில் உள்ளன.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது தேர்தலுக்கு அஞ்சும் இவர்கள், ஆளும் கட்சியாக இருந்த போதும் தேர்தலுக்கு பயந்தனர் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.