அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்களாக 36 பேர் நியமிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றிய 36 பேரை அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்களாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

மேலதிக செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகளுக்கு ராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ராஜாங்க அமைச்சு பதவிகள் இரத்தாகின. இதனையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன.

அனுபவமிக்க சிரேஷ்ட அரச அதிகாரிகளான ராஜாங்க அமைச்சின் செயலாளர்களின் சேவையை அமைச்சரவையின் அமைச்சுக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவர்களை மேலதிக செயலாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.