தொண்டமானின் மகனால் சட்டம் மீறப்பட்டதா? மஹிந்தவின் கட்சி விளக்கம்

Report Print Vethu Vethu in அரசியல்

ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது தந்தையின் இறுதி சடங்கில் தேர்தல் சட்டத்தை மீறியதில் எவ்வித பிரச்சினையுமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவத்துள்ளது.

ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட வேட்பாளராக கையொப்பமிடுவதற்கு முன்னர் அவரது தந்தையின் இறுதி சடங்கு இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் இறுதி சடங்கு நிறைவடையும் வரை வேட்பு மனுவில் கையொப்பமிடவில்லை என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலையினுள் தேர்தல் வேட்பாளர் அற்ற ஒருவர் தேர்தல் சட்டத்தை மீறியதான கூறவதனை நிராகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.