பொதுத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்.

கட்சியில் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலின் பின்னரே அதன் தீர்மானம் அறிவிக்கப்படும்.

தந்தை மீது மலையக மக்கள் அதிக நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். அந்த ஆதரவினை எனக்கும் வழங்குவார்கள் என தெரியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது தந்தை நம்பிக்கை வைத்திருந்தார். அந்த விசுவாசத்திற்கமைய எங்கள் கட்சி பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.