அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள சம்பிக்க

Report Print Ajith Ajith in அரசியல்
141Shares

நடப்பு அரசாங்கத்துக்கு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.

பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

தம்மை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்தினால் அதிகளவில் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் தம்மை தோற்கடிக்க முடியாது.

தம்மை தோற்கடிக்க வேண்டுமானால் கடந்த அரசாங்க காலத்தில் தாம் ஆரம்பித்த பெரும்நகர திட்டங்களை நடப்பு அரசாங்கம் முழுமையாக செய்துக்காட்ட வேண்டும்.

2023இல் கொழும்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இலகு தொடரூந்து உட்பட்ட திட்டங்களை நிறைவேற்றுதன் மூலமே தம்மை தோற்கடிக்க முடியும் என்று ரணவக்க தெரிவித்துள்ளார்.