தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் நியாயமற்றவை - அத்மிரல் சரத் வீரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்
74Shares

தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள உத்தரவுகளில் எவ்வித அடிப்படைகளும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இதனை விட நியாயமான முறையில் வேட்பாளர்களை பார்க்க வேண்டும். அவர்கள் வழங்கியுள்ள சில ஆலோசனைகளில் எவ்வித அடிப்படைகளும் இல்லை. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே இது நடந்தது. தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள மூன்று பேரின் நிலைப்பாடுகள் மூன்று விதமானவை. இதனால், அவை எப்படி நியாயமானவைகளாக இருக்கக் கூடும்?.

தேர்தல் அலுவலகங்களுக்கு எதிரில் இலக்கங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது. இது எப்படி நியாயமானதாக இருக்கும்?. எமது இலக்கங்களை பார்த்தால் மக்களுக்கு கொரோனா ஏற்படும் என்று அப்படி கூறுகின்றனரா என்ற கேள்வி எமக்கு எழுகிறது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.