கருணாவிடம் விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் செயலகம்

Report Print Steephen Steephen in அரசியல்
82Shares

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை அதிகாரியான கருணா அம்மான் சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் சிறார் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவின் டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறார் போராளிகளுக்கு பயிற்சிகளை வழங்குவது சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றம் எனவும் மனித உரிமை ஆணையாளரின் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருணா அம்மான் செய்த குற்றங்கள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது எனவும் மனித உரிமை ஆணையாளரின் செயலகம் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.

பொறுப்புக் கூறல் என்பது இலங்கையில் உள்ள அனைவருக்கும் பொருந்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.