களுத்துறை மேயர் அமீர் நசீர் பொலிஸாரால் கைது

Report Print Steephen Steephen in அரசியல்
306Shares

களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் நசீர், களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த மைதானம் ஒன்றின் பூட்டை உடைத்து திறந்தமை சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஏ.டி. நிலந்த என்பவரையும் தாம் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி இவர்கள் இருவர் உட்பட 12 பேர் மைதானத்திற்குள் அனுமதியின்றி சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.