தேர்தல் முடிவுகளை வெளியிடும் நேரம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ள மகிந்த தேசப்பிரிய

Report Print Steephen Steephen in அரசியல்
259Shares

பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு முன்னர் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

விருப்பு வாக்குகளை எண்ண அதிகமான நேரம் எடுக்கும் என்பதால், கட்சிகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி விபரங்களை வெளியிடவும் அதிகமான நேரம் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.