சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம்! மாவை

Report Print Murali Murali in அரசியல்
65Shares

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வடமராட்சி நெல்லியடி தொகுதியில் இன்று இடம்பெற்ற வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.