எம்.சீ.சீ என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் நிதியை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முடிவெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலின் போது உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுத்தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் எம்.சீ.சீ தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் 80 வீதமானவை சிறந்தவை என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். ஏனையவர்கள் இன்றும் உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதாக கூறுகின்றனர். சிலர் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என்றும் கூறுகின்றனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது தெரிவித்த கூற்றையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று ஹர்சன் ராஜகருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.