ஹரினுடன் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த சஜித் பிரேமதாச

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பொறுப்பாளர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுடன் மூவரும் நட்புறவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ அண்மையில் அரசியல் மேடை ஒன்றில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கர்தினாலின் அரசியல் பேச்சுக்களால் கிறிஸ்தவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர் என்று ஹரின் கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக தெரிவித்த கருத்து காரணமாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

எனினும் ஹரின் பெர்ணான்டே தமது கருத்து திரிபுப்படுத்தப்பட்டதாக பின்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, கடந்த நாட்களில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறி கொண்டு அனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.