நாட்டில் எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி! சுமந்திரனின் பகிரங்க எச்சரிக்கை

Report Print Dias Dias in அரசியல்

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்பட போகின்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் நேற்றைய தினம் வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த தேர்தலிலே முக்கியமான சில தீர்மானங்களை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கிறது.

எல்லாத் தேர்தல்களும் முக்கியமான தேர்தல்கள் தான். ஆனால் ஒவ்வொரு தேர்தலும் ஏன் முக்கியமானது என்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் இன்றைக்கு இருக்கின்ற காரணம் என்னவென்று மக்களுக்கு தெரிய வேண்டிய நிலை இருக்கிறது.

நாட்டிலே ஒரு ஆட்சி மாற்றத்தை நாங்கள் 2015இல் ஏற்படுத்தினோம். தற்போது அதுவும் இப்போது சறுக்கி விட்டது.

பழைய நிலைக்கே போய்விட்டோம் என்று பலர் சொல்லுகின்றார்கள். அதிலே உண்மை இருக்கிறது.

ஆனால் அதைவிட ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது நாட்டிலே. எந்த காலத்திலும் நாங்கள் சந்தித்திருக்காத இராணுவ ஆட்சி.

அதனுடைய ஆரம்ப அறிகுறிகள் எல்லாம் தெட்டத் தெளிவாகவே எங்களுக்கு தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.