இந்தியா மற்றும் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறை! மாவை

Report Print Dias Dias in அரசியல்

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் நேற்றையதினம் வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறீதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.