விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெறுப்படைந்தே கருணா வெளியேறினார்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெறுப்படைந்தே வெளியேறினார். எம்முடன் நட்புறவுகளை மேம்படுத்தி இணைந்து செயற்பட்டார். அவர் கடந்த காலத்தினைப் பற்றிக் கூறியிருக்கின்றார் என கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது கருணா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஜனாதிபதி பிரதமரே பதிலளிக்க வல்லவர்கள். அவர்களே கருணா அம்மான் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்கள்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இந்த நாட்டில் உயிர்ப்பலிகளுக்கு காரணமாக இருந்த அரசில் கட்சிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆகவே வரலாற்றில் கடந்த காலங்களில் தவறிழைத்தவர்கள் அதனை மீண்டும் செய்யாது இழைக்கப்பட்ட தவறுகளை தவறு என்றெண்ணி நினைவு கூருவது எந்தவகையில் தவறாகும்? தற்போது அரசியலை மையப்படுத்தியே கருணா அம்மான் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.