அரசாங்கத்துடன் எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்படவில்லை! ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் எவ்வித இரகசிய உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக 2020 பொதுத்தேர்தல் தொடர்பில் நேற்று நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக 161 கூட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

அரசாங்கத்துடன் தமது கட்சிக்கு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும் தாம் யாருடனும் உடன்படிக்கைகளை கொண்டிருக்கவில்லை. தாம் பொதுமக்களுடன் மாத்திரமே உடன்படிக்கைகளை கொண்டிருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தொற்று தொடர்பாக தற்போது பேசப்படுகிறது.எனினும் அரசாங்கம் அதற்கு தயாராகவில்லை என்றும் ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது எவருக்கு சேறும் பூசும் பிரசாரத்தை மேற்கொள்ளாது.

ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை மற்றும் நாட்டில் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்ட பிரசாரமே மேற்கொள்ளப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.