விருப்பு வாக்கு போட்டியில் ஈடுபட வேண்டாம்:மொட்டுக் கட்சியினருக்கு பிரதமர் ஆலோசனை

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் எனக் கூறி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

“ அவருக்கு விருப்பு வாக்கு இருக்கின்றது, அவருக்கு வழங்க வேண்டியதில்லை. எனக்கு விருப்பு வாக்கை தாருங்கள்” எனக் கூறி சில வேட்பாளர்கள் விருப்பு வாக்கு போட்டியில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சட்டவிதிகள் மற்றும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் விதம் சம்பந்தமாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களுக்கு விளக்குவதற்காக அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.