முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த வாய்ப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

எனது சகோதரர் முத்தையா முரளிதரனுக்கே நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தர்ப்பம் வழங்கினார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் முரளிதரனுக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது ஆகவே நான் இதில் இறங்க வேண்டியதாயிற்று.

உண்மையைக் கூறப் போனால் எனது பெற்றோருக்கே இதில் இஷ்டமில்லை.

எனினும் எனது தந்தை பிறந்த பிரதேசத்தை கொண்ட மாவட்டமாக நுவரெலியா இருக்கும் அதேவேளை, இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அறிந்து தெரிந்து அவர்களின் இன்னல்களை முடியமானவரை தீர்ப்பதற்கு எல்லை தாண்டி வந்திருக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.