ஜனநாயக ரீதியற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவை எதிர்ப்பேன் - செந்தில் தொண்டமான்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவு ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்படவேண்டும். தலைவர் தெரிவில் ஜனநாயகம் பின்பற்றப்பட்டாவிட்டால் அதனை தாமே முதலில் எதிர்க்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பொதுஜன முன்னணியின் பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமான் கூறியிருக்கிறார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தெரிவு விடயத்தில் முரண்பாடுகள் இருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் லங்காசிறி 24 நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கினார்.

தமக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.