இலங்கையின் பொருளாதாரம் விரைவில் பெரும் சரிவை சந்திக்கும் - மஹிந்த அரசுக்கு எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் விரைவில் பெரும் சரிவை சந்திக்கவிருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு, வெளிநாட்டு இருப்புக்களைப் பயன்படுத்தினால் இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“2019இல் நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைத்தபோது இலங்கையின் வெளிநாட்டு இருப்பு 7.2 பில்லியன் டொலராக இருந்தது. எனினும், நாங்கள் ஒரு வெற்று கஜானாவையே ஒப்படைத்ததாக அரசாங்கம் கூறியுள்ளது.

வெளிநாட்டு இருப்புக்கள் பொதுவாக இறக்குமதி செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும், தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதற்கு வெளிநாட்டு இருப்புக்களை பயன்படுத்துகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்று காலப்பகுதியில் விதிக்கப்பட்ட இறக்குமதி மீதான தடை நீட்டிப்பதன் காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவரகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.