எம்.சீ.சீ அலுவலகம் தெஹிவளையில் இருப்பது பற்றி சரியாக தெரியாது! விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவின் எம்.சீ.சீ நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை அலுவலகம் தெஹிவளையில் இருப்பதாக தான் கூறினாலும் அது பற்றி தனக்கு சரியாக தெரியாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அதனை தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.சீ.சீ அலுவலகம் தொடர்பாக செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எம்.சீ.சீ. அலுவலகம் தெஹிவளையில் இருப்பதாகவே கேள்விப்பட்டேன். எனினும் தொடர்ந்தும் அது பற்றி தேடி வருகிறேன்.

சில நேரம் இந்த அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்கு சொந்தமான வளவுக்குள் இருக்கலாம். இது குறித்து தொடர்ந்தும் தகவல்களை தேடி வருகிறேன்.

கிடைத்துள்ள தகவல் ஒன்றுக்கு அமைய இவர்களின் ஒரு அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்குள் இருக்கின்றது.

அதற்கு வெளியில் நிபுணர்களின் குழு ஒன்று எம்.சீ.சீ என தம்மை அடையாளப்படுத்தாது உத்தியோகபூர்வமற்ற வகையில் அலுவலகம் ஒன்றை பயன்படுத்தி வருகிறதாகவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.