சீ.ஐ.டியில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் பிரதமருக்கு அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு, திணைக்களம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர், அண்மையில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று குற்றவியல் விசாரணை திணைக்களம் வாக்குமூலங்களை பெறவுளளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.