அனைத்திலங்கை கல்வி நிபுணர்களின் சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி இணக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

அனைத்திலங்கை கல்வி நிபுணர்களின் சம்மேளனத்தின் பல பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கள் உட்பட்ட விடயங்களும் இந்த இணக்கத்தில் அடங்கியுள்ளன.

பிரத்தியேக வகுப்புக்களில் 1000 மாணவர்களுக்கு கற்பித்து வந்த ஆசிரியர்கள் 250 மாணவர்களை மாத்திரம் ஒரு வகுப்புக்கு அனுமதிப்பது சாத்தியமல்ல என்பதை நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு 500 மாணவர்களை உள்ளடக்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதேவேளை பாடவிதானங்கள் நிறைவு செய்யப்படாத நிலையில் பரீட்சைகளுக்கான திகதிகளை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நடப்பில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அறிவிடப்படும் 24 வீத வரியை திருத்துவதற்கும் ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி பிரத்தியேக வகுப்புக்களுக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.