ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐ.தே.க உறுப்பினர்கள் 1000 பேர் இணைவு

Report Print Gokulan Gokulan in அரசியல்

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் 1000 பேர் இணைந்துக்கொண்டுள்ளனர்.

கங்கேஹில, கோரளை பிரதேச சபையின் எட்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000 ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இன்று இணைந்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வு நாவலப்பிட்டி கிரேன் பெவலியன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் 1000 பேர் பச்சை நிற தொப்பியினை அணிந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானநந்த அளுத்கமகே மண்டபத்திற்கு வந்தவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொப்பியினை அணிந்து ஆதரவினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.