தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்! கருணா

Report Print Murali Murali in அரசியல்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வானொளி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை குறித்து அரசாங்கத்துடன், பேசிவருகின்றேன். போருக்குப் பின்னர், சிலர் சிறிய பிரச்சினைகளுக்காக கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவர்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். சுமார், 13 ஆயிரம் தமிழ் போராளிகள் மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

எனவே, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.