உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்க தவறிய அரசியல்வாதிகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்க தவறியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களை கடந்த மார்ச் இரண்டாம் திகதியே கையளிக்க வேண்டியிருந்தது.

இருப்பினும் அதில் சிலர் தமது வாகனங்களை கையளிக்க தவறியுள்ளனர். இவ்வாறான ஐந்திற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை உடனடியாக கைப்பற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது இராஜாங்க அமைச்சர்கள் இல்லாததால், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களும் மீண்டும் கையளிப்பட வேண்டும்.

அத்துடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், சட்டத்தை மீறியமை நிரூபிக்கப்பட்டால், தேர்தலின் பின்னர் அந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆசனங்களை இழக்க வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.