தேர்தலுக்கு பின் சஜித் தலைமையில் தேசிய அரசாங்கம்?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூன்று பிரதிநிதிகளுக்கும் சஜித் பிரேமதாச அணியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு கிடைக்கும் எனவும் இவர்கள் இதன் போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்திற்கு மத்தியில் இந்த விசேட சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதுடன் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.