எம்மை சிதைக்க சதிவேலைகள் நடந்தேறுகின்றன - தவராசா கலையரசன்

Report Print Varunan in அரசியல்

எங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பெரியநீலாவணை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படி இருக்கின்றோம். நாங்களும் அந்த கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டவர்கள் இன்று அந்த வழி எல்லாம் திசைமாறி எம்மை சின்னாபின்னமாகி இருப்புக்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காக பல சதி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு அனைத்தையும் செய்தது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டாம் என கூறியது போலவும் பல பொய்யான பிரச்சாரங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியும் வட கிழக்கிலே மிகவும் பலம் பொருந்திய தமிழர்களை எவ்வாறு சின்னாபின்னமாக்கலாம் என்று. அம்பாறை மாவட்டத்திலே பல போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மைச் சுற்றி திரிகின்றார்கள். எங்களை வசைபாடி இல்லாமல் செய்வதற்கு பல வழிகளைச் செய்கிறார்கள்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் தாங்குபவர்கள். நாங்கள் அதே போல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களும் நாங்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.