ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்து எம்மோடு இணைந்த அனைவருக்கும் நானே பாதுகாப்பு! மஹிந்தானந்த

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் கங்கேஹில கோரளை பிரதேச சபையின் எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்த 1000 பேருக்கும் தானே பாதுகாப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஆயிரம் ஆதரவாளர்கள் மற்றும் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோடு இணைந்து கொண்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்து.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்றய தினம் நாவலபிட்டி கங்கேஹில கோரளை பிரதேசசபையில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் எட்டு உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் 1000 பேரும் எம்மோடு இணைந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள். இவர்களுடைய தாய், தந்தையர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள்.

முன்னால் பிரதேசசபை உறுப்பினர்களும் வந்து இணைந்துள்ளார்கள். ஏன் இவர்கள் வந்தார்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இவர்களுக்கு இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கங்கேஹில பிரதேசசபையில் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தார்கள். அந்த எட்டு பேரும் எம்மோடு இணைந்து கொண்டார்கள்.

கங்கேஹில பிரதேச சபையில் எதிர்கட்சி ஒன்று இல்லை. நாவலப்பிட்டியில் மாத்திரமல்ல ஒவ்வொரு தோட்ட பகுதியில் இருந்தும் மக்கள் எம்மோடு இணைந்து கொள்வதற்கு வருகிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி முறையாக செயற்படவில்லை என கூறிதான் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ஒரு கட்சியினை உருவாக்கினார்கள்.

அவர்களும் இந்த மக்களுக்கும் ஒன்றும் செய்ததில்லை. ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தார்கள். மக்களுக்கு என்ன செய்தார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.