இலங்கையில் தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமலிருப்பதை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம்.

மேலும் அடுத்த 50வருடங்களிற்கு நாடாளுமன்றத்திற்கு தீவிரவாதிகள் தெரிவு செய்யப்படாத நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கும்.

தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் மற்றும் மலாய் என அனைத்து சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால் தீவிரவாதிகளிற்கு ஒருபோதும் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.