வன்னி மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் 256 பேர் இணைவு

Report Print Theesan in அரசியல்

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஜனக நந்த குமாரவுடன் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் சிங்கள சுயேட்சை குழுக்களிலிருந்து அதன் பிரதிநிதிகள் உட்பட 256 பேர் தமது ஆதரவினை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியுள்ளதுடன் அக்கட்சியின் உறுப்புரிமைகளையும் வன்னி மாவட்ட வேட்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர் .

நேற்று மாலை ஓவியா விருந்தினர் விடுதியில் வன்னி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜனக நந்த குமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது பொதுஜன பெரமுன கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர் .

பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை வழங்கி கலந்து கொண்ட மக்கள் மத்தியில் வேட்பாளர் ஜனக்க நந்த குமார உரையாற்றும் போது,

கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே இந்த வன்னி மாவட்டத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் என்னிடம் 2019ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பணியாற்றியதற்காக என்னிடம் பொறுப்புத்தந்தார்கள். நான் இந்த வன்னி மாவட்டத்தில் பிறக்காவிட்டாலும் பல கிராமங்களுக்கு சென்று இங்குள்ள சிக்கல்களை தெரிந்து வைத்துள்ளேன் .

வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்புதவற்காக நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்புக்களை தாருங்கள் இங்குள்ளவர்களின் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படவில்லை. விரைவில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.