எல்லைகள் திறந்துவிடப்பட்ட நாடுகளின் பட்டியல் இரு வாரங்களுக்கு ஒருமுறை மீளமைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனா வைரஸ் தளர்வுகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகள் திறந்துவிடப்பட்ட நாடுகளுக்கான பட்டியல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மீளமைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பிய எல்லைகள் திறந்துவிட்ட நாடுகளின் பட்டியலில் 15 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும் இதில் இலங்கை சேர்த்து கொள்ளப்படாமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தது.

இந்த நிலையில் தமது நாடுகளின் விமான நிலையங்களை கொரோனாவுக்கு மத்தியிலும் திறந்துவிட்ட, அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயணிகளை ஏற்றுக் கொள்கின்ற நாடுகளுக்கே தமது ஒன்றிய நாடுகளின் எல்லைகள் திறந்து விடப்படுவதாகவும் பட்டியலில் இடம்தரப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு கிழமைகளுக்கு ஒருமுறை மீள் அட்டவணைப்படுத்துவதாகவும் ஒன்றியத்தினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று இலங்கையில் வெளிநாட்டவர்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.


You may like this video..