வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பலத்தினை நாங்களே இழக்கின்றோம்! பா.அரியநேத்திரன்

Report Print Kumar in அரசியல்

வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பலத்தினை நாங்களே இழக்கின்றோம் என்பதை மட்டக்களப்பு தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுவான தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.நடராஜா,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தலைவர் கி.சேயோன் மற்றும் பிரதேசசபையின் தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்துபவர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.