மஹிந்தவிற்கும், கோட்டாபயவிற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள்! சுமந்திரன் தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளதாக என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நடந்திருந்தது.

அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

அண்ணன் 24 வயதில் நாடாளுமன்றத்திற்கு சென்றவர். இப்போது 50 வருட நாடாளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தில்தான் மஹிந்த பயிற்றப்பட்டவர்.

அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் நாடாளுமன்றத்தில் தான் இருந்தது.

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்புபட்டே இருந்தது.

இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்று கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,