முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்திய நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உட்பட 7 பேரை கைது செய்யப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உட்பட 7 பேரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த பிடியாணை இடைநிறுத்துமாறு கோரி, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் விதம் சட்டத்திற்கு முரணானது எனவும் தமது மனுவை விசாரணைக்கு எடுக்குமாறும், இந்த மனுவை விசாரித்து முடிவுக்கும் வரையில் பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி உத்தரவிடுமாறும் மனுதார்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனுவை இன்னு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மனுவின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷரான் குணரத்ன, சோபித ராஜகருண ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.