2025 ஜனாதிபதி தேர்தல் வரையில் சஜித் பொறுத்திருக்கவேண்டும்! ருவான் விஜேவர்தன

Report Print Ajith Ajith in அரசியல்

2025 ஜனாதிபதி தேர்தல் வரையில் சஜித் பிரேமதாச பொறுத்திருக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவை பொறுத்தவரையில் அவர் அவசரப்பட அவசியமில்லை.

2025ம் ஆண்டு அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வரமுடியும் என்று ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அது எவரினதும் தனிப்பட்ட சொத்தல்ல. அது மக்களுடைய கட்சியாகும்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பண்டாரநாயக்கவுடையது, மொட்டு ராஜபக்சர்களுடையது என்றும் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது சஜித் பிரேமதாசவின் கட்சியுடன் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் அரசாங்கத்துடனேயே அது மோதல் நடக்கிறது என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளர்.