ராஜபக்சர்கள் கூட்டமைப்பின் நிரந்தர எதிரிகள் அல்ல! சம்பந்தன் தெரிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சர்களை நிரந்தர எதிரியாக கருதவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இன்று மாலை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

சோனியா சர்கார் என்ற சர்வதேச செய்தியாளர் தனது டுவிட்டரில் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை விடுத்துள்ளார்.

சர்வாதிகரபோக்கினை கொண்டுவந்தமை போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களை அவர்கள் செய்ததன் காரணமாகவே நாங்கள் 2015 இல் அவர்களை எதிர்த்தோம் என சம்பந்தன் கூறியுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவில் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் ராஜபக்சர்கள் நாட்டை முன்னேற்றகரமான விதத்தில் ஆட்சி செய்தால் நாங்கள் அவர்களை எதிர்க்கமாட்டோம் என சம்பந்தன் தெரிவித்தார்,

தற்போது எங்கள் தீர்மானங்கள் சில கொள்கைகளின் அடிப்படையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.