ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Report Print Ajith Ajith in அரசியல்

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அபேஜன பல கட்சியின் தலைவருமான அத்துரலியே ரதன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாதி என்று குறிப்பிட்டே அவரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரதன தேரர் முறையிட்டுள்ளார்.

ஞானசார தேரரை பொறுத்த வரையில் அவர் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் இனவாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டுமென்றும் ரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.