நாவலப்பிட்டி நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Report Print Thirumal Thirumal in அரசியல்

நாவலப்பிட்டி நகருக்கு இன்று சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, நாவலப்பிட்டி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2020 ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டம் தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்படி கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி நாவலப்பிட்டி பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.

நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்திற்கு சென்ற ஜனாதிபதி, சர்வமத வழிபாட்டில் பங்கேற்ற பின்னர், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடி அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

நாவலப்பிட்டிய பேருந்து நிலையத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர்.