சுமந்திரன் எமது உத்தியோகபூர்வ பேச்சாளர் அல்ல! சீ.வி.கே.சிவஞானம் அதிரடி

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரன் அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சுமந்திரன் உத்தியோகபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தான். ஆனால் பல சந்தர்ப்பங்களில் எங்களுடைய கூட்டங்கள் முடிந்த போதும் அவர் கருத்து தெரிவிக்கும் சூழ்நிலை இருந்து வந்துள்ளது.

அதை நாங்களும் ஏற்றுக் கொண்டு எங்களது தலைமையும் நடந்து கொண்டுள்ளது.

எனினும் உண்மையில் தெளிவான வகையில் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறோம் கூட்டமைப்பினுடைய பேச்சாளர் தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக இருக்க முடியாது.

அப்படியென்றால் ஏனைய கட்சிகளுக்கு யார் பேச்சாளர் என வினா எழுப்பியுள்ளார்.