ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்டபோது ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அதனை பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் அஜித் பி பெரோரா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியினால் தமது கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளதையும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.