தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் உட்பட உயர்பதவிகளில் உள்ளவர்களிற்கு எதிராக நடவடிக்கை! மிரட்டும் சுமந்திரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை தமிழரசுக் கட்சியில் உயர் பதவியில் இருந்து கொண்டு எல்லைமீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்.

இல்லாத பொல்லாத பொய்களையெல்லாம் ஒருவர் இருவர் அல்ல பலர். கட்சிக்குள்ளே இருந்தே செயற்படுகிற போது அதை காணாமல் இருந்து விட்டு போய் விட முடியாது.

ஆனபடியால் அந்த அம்மணிக்கு எதிராக நேற்றைய தினம் நான் வக்கில் நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருக்கிறேன்.

மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும். 1000 கோடி ரூபாய்க்கு வழக்கு தாக்கல் செய்வதாக அவருக்கு ஏற்கனவே அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே அறிவுறுத்தல் அவருக்கு பின்னால் இருந்து செயற்படுகிறவர்களுக்கும் வருகிற நாட்களிலே அனுப்பப்பட போகிறது.

அவர்கள் கட்சியிலே உயர்பதவியிலே இருப்பவர்களாகவும் இருப்பார்கள் சிலர். தேவையேற்பட்டால் சக வேட்பாளர்களுக்கும் நான் அதனை செய்ய தயங்க போவதில்லை.

எல்லைமீறி மற்றவர்கள் செயற்படுகின்ற போது சில வேளைகளிலே இப்படியான செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றது.