காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு கொழும்பில் இழைக்கப் பட்ட அநீதி! ரவிக்குமார் குற்றச்சாட்டு

Report Print Banu in அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை காரணமாக வைத்து மனோகணேசன் பெருமளவிலான பணத்தை கொள்ளையடித்துள்ளார் என புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கட்சியில் இருபது வருடங்களாக செயலாற்றியவருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்புத்தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் கதைப்புத்தகம் எழுதிக்கொண்டிருந்த மனோகணேசனை கொழும்புக்கு வரவழைத்தேன்.ஆனால் பிரபாகணேசனே பிரபலமானவராகா விளங்கினார். அவரை அடையாளப்படுத்தி சரியான பாதையில் செல்ல வழி நடத்தினோம். அவர் எத்தனை அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார்? காணாமல் போனவர்களில் எத்தனை பேரை கண்டுபிடித்துத்தந்துள்ளார்? அவர் ஒன்றுமே செய்யாமல் நான்கடி காம்பிராவுக்குள் மட்டுமே அரசியல் செய்கிறார்.

காணாமல்போனவர்களுக்காக கொழும்பில் நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களை, கூட்டங்களையும் ஏற்பாடு செய்தவர்கள் நாங்கள்.ஆனால் மனோ கணேசன் கறுப்பு சட்டை, கறுப்பு கண்ணாடி அணிந்து வந்து பேசிவிட்டு போய் விடுவார். அவர் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் எவ்வளவு கொள்ளையடித்துள்ளார் என்பதை என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என்று கூறியுள்ளார்.