ஐந்து தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கில் முக்கிய சாட்சி யார்? வெலிக்கடையில் வாடும் தமிழர்கள்!

Report Print Banu in அரசியல்

கடந்த 2017ஆம் ஆண்டு கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஐவரின் வழக்கில் சுமந்திரன் பிரதான சாட்சியாகவுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

IBC ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2017ஆம் ஆண்டு கிளிநொச்சியில் கைது செய்யப்பட ஐவரும் தேசிய புலானய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடைப்படையில் சுமந்திரனுக்கெதிராக செயற்படுவதாக தெரிவித்து அதன் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதானமான சாட்சி சுமந்திரன் ஆவார். அவ் வழக்கில் அவர் என்ன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.