சஜித் பிரேமதாசவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - இராவணா பலய

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அனுமதியின் பேரில் அனுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவமான கட்டடங்கள் அழிக்கப்பட்டதாக சத்தாதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

துட்டகைமுனு மன்னனின் விஜிதபுர போர் நடைபெற்றதாக கூறப்படும் விஜிதபுர கோட்டையின் எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டன. கிராமத்தை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அரச அதிகாரிகள் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது ஆச்சரியமானது எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.