கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு தொடர்ந்த ரஞ்சன் ராமநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்க கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்க தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமையவே ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.