எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் - நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சிகள் இணைந்த கூட்டணியால் கிடைக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முழுமையான அரசியலமைப்பு உருவாக்க தேவையான உரையாடலை கட்டியெழுப்ப மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாக கொண்டது. நாட்டுக்கு கெடுதியான சில உடன்படிக்கைகளை தோற்கடிக்க எமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

கட்சிகள் இணைந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது. 19வது திருத்தச் சட்டத்தை கட்சிகள் இணைந்துக்கொண்டு வந்தன.இறுதி நேரத்திலும் அதில் மாற்றங்களை செய்தனர். இந்த திருத்தச் சட்டம் நல்லதா கெட்டதா என்ற விடயமல்ல. அதனை கொண்டு வந்தவர்கள் எதிர்பார்த்த எதுவும் அதில் இல்லை.

மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிநாட்டு பிரஜா உரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாதபடியான தீர்மானங்கள் மாத்திரமே அதில் உள்ளன.

கட்சிகள் இணைந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலைமைய நாம் நாட்டின் வரலாற்றில் கண்டுள்ளோம். மக்களை மையமாக கொண்ட அரசியலமைப்புச் சட்டமே நாட்டுக்கு தேவை. அப்படியான அரசியலமைப்புச் சட்டம் தேவை என்றால் மக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமின்றி வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டுமாயின் எமக்கு வலுவான நாடாளுமன்றம் அவசியம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.