முதல் நான்கு மாதங்களில் அரசாங்கத்தின் கடன் சுமை ஒரு ரில்லியன் ரூபாய் - ஹர்ச டி சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் முதல் நான்கு மாதங்களில் கடன் சுமையானது ஒரு ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஐந்தாண்டுகள் கடனை பெற்றது. அதற்கு முன்னர் ராஜபக்ச அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கடன் பெறப்பட்டது. எனினும் அந்த ஐந்தாண்டுகளில் நாட்டின் கடன் சுமையானது 5.6 ரில்லியனாகவே அதிகரித்திருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் கடன் சுமையானது ஒரு ரில்லியனாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பந்துல குணவர்தன உட்பட ஆளும் கட்சியின் குழுவினர் கடந்த அரசாங்கத்தின் கடன் பற்றி பேசுவது போல் செயற்பாடுகள் குறித்து பேச வேண்டும் எனவும் ஹர்ச டி சில்வா கூறியுள்ளார்.

நான்கு மாதங்களில் என்ற இந்த குறுகிய காலத்தில் கடன் சுமையானது ஒரு ரில்லியனாக அதிகரித்திருப்பதற்கு கொரோனா பாதிப்பு காரணமில்லையா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஹர்ச டி சில்வா கொரோனா காரணமாக சிறிய பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.