அரசியல் விஞ்ஞானம் படிப்பதால் தொழில்களை பெற முடியாது - தொழிநுட்பம் படியுங்கள் - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

பாடசாலை மாணவர்கள் அதிகமாக தொழிநுட்ப பாடங்களை கற்பதில் நேரத்தை செலவிட வேண்டும் எனவும் அரசியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பதால் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்டான பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் நேற்று கலந்துக்கொண்ட போது மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மாணவி - நாங்கள் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், இஸட் புள்ளிகள் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக முடியவில்லை. இதனால், கல்வி முறையில் மாற்றங்களை செய்து 20 வயதில் நாங்கள் சிறந்த இடத்திற்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா?.

ஜனாதிபதி - என்ன படிக்கின்றீர்கள்?.

மாணவி - நான் உயர் தரம் எழுதி விட்டு இருக்கின்றேன். இரண்டாவது முறையும் எழுத போகிறேன்.

ஜனாதிபதி - என்ன பிரிவில் படித்தீர்கள்?

மாணவி - அரசியல் விஞ்ஞானப்பாடத்தை நான் கற்றேன்.

ஜனாதிபதி - நீங்கள் தொழிநுட்பட கல்வியை கற்க வேண்டும். அரசியல் விஞ்ஞானம் அது இதுவென படித்து தொழில்களை பெற முடியாது. வாய்ப்புள்ள துறைகளை தெரிவு செய்து படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.